Editorial / 2020 ஜூலை 20 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், தயாரித்த கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த சந்தேகநபரை, இம்மாதம் 23ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் பி.சிவக்குமார், இன்று (20) உத்தரவிட்டார்.
சாந்திநகர், சூரங்கால், கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், வெடிமருந்துகள் இட்டுத் தயாரித்த கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த நிலையிலே, கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
9 minute ago
30 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
30 minute ago
1 hours ago
1 hours ago