2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கைதிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள்

Freelancer   / 2022 மார்ச் 07 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் 75 பிள்ளைகளுக்கு காற்பாதனி மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

திருகோணமலை சிறைச்சாலையும், திருகோணமலை சிறைச்சாலை சிறைக் கைதிகள் நலன்புரிச் சங்கமும் இணைந்து இதை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்வு சிறைச்சாலை அத்தியட்சகர் வசந்த குமார டேப் தலைமையில் திருகோணமலை நகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் சிறை கைதிகள் மற்றும் விளக்கமறியல் கைதிகளின் பிள்ளைகளுக்கே கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X