2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கொடூர கொலையின் பிரதான சூத்திரதாரி 50 நாட்களின் பின் கைது

Freelancer   / 2022 நவம்பர் 11 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - பேதிஸ்புர பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் 50 நாட்களின் பின் நீர்கொழும்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 11.09.2022 அன்று பேதிஸ்புர பகுதியில் நள்ளிரவில் 32 வயதுடைய நபரை கொடூரமாக கொலை செய்த சந்தேக நபர் 50 நாட்களின் பின் நேற்றைய தினம் அதிகாலை நீர்கொழும்பு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதுடைய மேற்படி சந்தேகநபரை பொலிஸார் தகவல் அடிப்படையில் கைது செய்து திருகோணமலைக்கு அழைத்து வந்து இன்றைய தினம் (11)நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 

கொலை சம்பவம் நடந்து 50 நாட்களின் பின்னர் மேற்படி நபர்  கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை குறித்த சந்தேக நபரின் தாயாரும்  (வயது 44) நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர். அவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது. R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .