2025 நவம்பர் 17, திங்கட்கிழமை

கொன்சியூலர் பிராந்திய அலுவலகம் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2021 மார்ச் 14 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் , தீஷான் அஹமட், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ், ஏ.எம்.ஏ.பரீட், அ.அச்சுதன் 

வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் நான்காவது கொன்சியூலர் பிராந்திய அலுவலகம், வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால்  திருகோணமலையில் நேற்று (13) திறந்து வைக்கப்பட்டது.

“அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை கிராமங்களுக்கும் கொண்டுசெல்லல்” என்ற அரசாங்கத்தின் திட்டத்துக்கமைய,  மக்களுக்கு இலகுவான முறையில்  சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலும், வெளிநாட்டில் கடமை புரிகின்றவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் அதனோடு தொடர்புடைய சகல விடயங்களையும் தீர்த்து வைப்பதற்காகவும் இப்பிராந்திய அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

கடந்த காலங்களில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் கொன்சியூலர் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக இப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் பல மணித்தியாலங்களை செலவிட்டு கொழும்புக்கு வருகை தந்து சேவைகளை பெற்றுக் கொண்டார்கள். இதன் காரணமாக பல்வேறு வகையான சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

எனவே, கிழக்கு மாகாண மக்களுக்கு இச்சேவையை  பெற்றுக் கொடுக்கும் வகையில், இதன் பணிகள் திருகோணமலையில்  ஆரம்பித்து வைக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமாகிய கபில நுவன்  அத்துகோரல, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தெளபீக், ராசமாணிக்கம் சாணக்கியன், யதாமணி குணவர்தன, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின்  செயலாளர் அட்மிரல் கொலம்பகே உட்பட பலரும் கலந்துகொண்டனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X