Princiya Dixci / 2021 ஜூன் 09 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மெட்டியாவ வடக்கு ஈச்சங் குளம் காட்டுப் பகுதிக்கு அண்மையில் யானை ஒன்றின் உடலம், நேற்று (08) மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டரை அடி நீள தந்தத்தைக் கொண்ட, சுமார் 30 தொடக்கம் 35 வயது மதிக்கத்தக்க, 8 அடி உயரமுடைய கொம்பன் யானை ஒன்றே இறந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த யானை, இரு வாரங்களுக்கு முன்னர், பன்றிக்கு வைக்கும் சோளவ வெடியை உட்கொண்டு தொண்டையில் சிக்கியதன் காரணமாக உணவு சாப்பிட முடியாது இறந்திருக்கலாம் என வன ஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.
யானையின் இறப்பு தொடர்பிலான மேலதிக விசாரணைகளை, வனஜீவராசி அதிகாரிகளுடன் இணைந்து தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

3 hours ago
5 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
16 Nov 2025