2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கொரோனா அச்சம் ; மாணவிகள் வரவில் இன்றும் வீழ்ச்சி

Princiya Dixci   / 2021 ஜனவரி 26 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம் கீத் 

திருகோணமலையிலுள்ள பிரபல மகளிர் கல்லூரியின் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஞாயிற்றுக்கிழமை (24) உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இன்று (26) இரண்டாம் நாள் பாடசாலைக்கு 04 மாணவிகள் மட்டும் வருகை தந்திருத்தனர் என அக்கல்லூரியின் அதிபர் தெரிவித்தார்.

ஆசிரியர்களின் வரவும் மிகக் குறைவாக காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

குறித்த கல்லூரியில், திருகோணமலை நகர சபையால் இன்று (26) தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதேவேளை, திருகோணமலை நகர்ப்பகுதியில் உள்ள தமிழ்,  முஸ்லிம் பாடசாலைகளில் மாணவர்களின் வரவும் குறைவாக காணப்படுவதால் கற்றல்,  கற்பித்தல் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. 

திருகோணமலையில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X