2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா தொற்றாளர்களுக்கு சுதேச மருந்து

Princiya Dixci   / 2020 நவம்பர் 18 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன்  கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம்

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு வழங்கப்படவுள்ள சிறப்பு பாரம்பரிய  மருந்து, மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் ஆதரவின் கீழ் இன்று (18)  விநியோகிக்கப்பட்டது.

நிகாவரத்திய ஜீவா ஆயுஷா மருத்துவமனையின் இயக்குநர் ஜெனரல் டொக்டர் சாதுன் கோட்டயாவட்டே மருந்துகளை ஆளுநரிடம் ஒப்படைத்துள்ளார். ஆளுநர், மருந்துகளை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.லதாஹரனிடம் ஒப்படைத்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75ஆவது பிறந்தநாளையொட்டி இந்த நிகழ்வு நடைபெற்றது. 

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த மருந்துகள் வழங்கப்பட உள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X