Niroshini / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.ரி.சகாதேவராஜா
கல்முனை பிராந்தியத்தில் முதலாவது தடுப்பூசி ஏற்றிய வீதம் 93 சதவிகிதத்தை தாண்டியுள்ளதாகத் தெரிவித்த கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப்ப ணிப்பாளர் சுகுணன், இரண்டாவது தடுப்பூசி நாளை (30) கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படும் என்றும் கூறினார்.
இந்நிலையில், எண்ணி இன்னும் மூன்று கிழமைகளுக்குள் கல்முனை பிராந்தியத்தில், கொரோனா மரணங்களை பூச்சியத்துக்கு கொண்டு வருவோம் என்றும், சுகுணன் சூளுரைத்தார்.
இது தெர்டர்பில் தொடர்ந்துரைத்த அவர், தடுப்பூசி வழங்கலில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், கல்முனை பிராந்தியத்தில். தொற்றின் வேகமும் மரண வீதமும் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.ஷ
எமக்கு இறுதியாக கிடைத்த தடுப்பூசிகளைக் கொண்டு முதலாவது டோஸ் இதுவரை 93 வீதமானோருக்கு ஏற்றியுள்ளோம் எனத் தெரிவித்த அவர், இது சாதனையாக கருதப்பட்டது எனவும் எனினும், 60 வயதுக்கு மேற்பட்ட சிலர் தடுப்பூசிகளைப் பெறாத காரணத்தால் மரண வீதம் அதிகரித்து வருவதாகவும் கூறினார்.
'இதேவேளை, கல்முனை பிராந்தியத்தில், இந்த வாரத்தில் அதிகளாவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். இதுவரை இல்லாத வகையில் இந்த வாரத்தில் ஒரே நாளில் அதிகூடிய தொற்றாளர்கள் எண்ணிக்கையாக 181 பேர் அடையாளம் காணப்பட்டனர்' என்றார்.
54 minute ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago
7 hours ago