2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

கோணேஸ்வரர் இளநீருடன் கசிப்பு ; ஒருவர் கைது

Janu   / 2024 ஜூன் 24 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலய கடை தொகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒருவரை, பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (23) கைது செய்துள்ளனர்.

குறித்த ஆலய கடை தொகுதியில் இளநீர் விற்பனையில் ஈடுபட்டு வந்த 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன்போது 15 போத்தல்களில் 14 போத்தல்களை விற்பனை செய்துள்ள நிலையில் ஒரு போத்தல் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது .

கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் செவ்வாய்க்கிழமை (25) அன்று திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரனைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏ எம் கீத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X