2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கோபுரத்தில் இருந்து “கோட்டா கோ ஹோம்’’ கோஷம்

Editorial   / 2022 ஏப்ரல் 10 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தீஷான் அஹமட்

திருகோணமலை - சேருநுவர நகர் பகுதியிலுள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் ஏறிய தனிநபர் ஒருவர், "Gota go home " என்ற வாசகத்தை ஏந்தி  எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சேருநுவர பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் சுலோகங்களை ஏந்தி , கோஷங்களை எழுப்பி, அரசாங்கத்தின் மீதுள்ள எதிர்ப்பை நேற்றுமுன்தினம் (09) வெளிப்படுத்தியிருந்தனர். இதன்போது டயர்களை எரித்தும் ​எதிர்ப்பை வெளியிட்டனர்.

மணிக்கூட்டு கோபுரத்தில் ஏறியிருந்த நபர் கோட்டாபாய, பசில் ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக தமது கோசத்தை எழுப்பினார்.  மாலை 4.20 தான் ஆரம்பித்த எதிர்ப்பு போராட்டத்தில், மாலை 6.30 நிறைவு செய்துகொண்டு கோபுரத்தில் இருந்து இறங்கிக்கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .