Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2023 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான மாடு ஒன்றை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ்கான்ஸ்டபிள் ஒருவர் பணியில் இருந்து நேற்று (22) இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ்கான்ஸ்டபிள், மாடு ஒன்றை திருடிய குற்றச்சாட்டில் கடந்த 20 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அதனையடுத்து கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் பிணையில் வெளிவந்துள்ளார்.
இந்நிலையில், அவரை திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உடனடியாக பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
41 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
46 minute ago