Editorial / 2022 மார்ச் 01 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)
ஹொரவ்பொத்தானை - திருகோணமலை வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் வணபிதாவும் சாரதியும் பலியாகினர்.
இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.
ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் திருகோணமலை நோக்கி வந்த சொகுசு காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காரில் பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமாகினர்.
திருகோணமலை, அன்புவளிபுரம் சகாய மாதா ஆலயத்தின் பங்குத் தந்தை கணேசபிள்ளை நிதிதாசன் (வயது 49) என்பவரும், கார் சாரதியுமே மரணமானார்கள்.
மரணமான பங்குத்தந்தை முன்னர் கிழக்கிலங்கை மனிதாபிமான பொருளாதார அபிவிருத்தி (எஹெட்) நிறுவனத்தின் திருகோணமலைப் பணிப்பாளராகவும் சேவையாற்றியிருந்தார்.
மணல் ஏற்றி வந்த கனரக வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் ஹொரவ்பொத்தானை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். (K)
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025