2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

சூதாடிய மூவர் கைது; பலருக்கு வலைவீச்சு

Princiya Dixci   / 2016 நவம்பர் 01 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் பணத்துக்காகச் சூதாடிய மூவரை, திங்கட்கிழமை (31) இரவு, கைதுசெய்துள்ளதாக சேருநுவரப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் சூதாடிய இடத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் இருந்துள்ளதாகவும் மூவரைத் தவிர மற்ற அனைவரும் தப்பியோடியுள்ளதாகவும் குறித்த நபர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்தனர்.       
       
சேருநுவர, கல்லாறு மற்றும் எல்.பி மூன்று பகுதிகளைச் சேர்ந்த 34, 28 மற்றும் 30 வயதுடைய மூவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர்களைக் கைது செய்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X