2026 மார்ச் 23, திங்கட்கிழமை

சாராயத்துடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

தனியார் பஸ்ஸில் 12 சாராயப் போத்தல்களை மறைத்து விற்பனைக்காக கொண்டுசென்ற குற்றச்சாட்டில் பயணியொருவரை திருகோணமலை, கோமரங்கடவெலப் பகுதியில்  கைதுசெய்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

சாராயம் விற்பனை செய்தமை தொடர்பாக சந்தேக நபருக்கு திருகோணமலை நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.

இவ்வாறிருக்க, சட்டவிரோதமான முறையில் வீட்டில் சாராயம் விற்று வருவதாக கிடைத்த தகவலை அடுத்து மற்றுமொரு நபரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார்  குறிப்பிட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .