2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

சாராயத்துடன் கைதானவருக்கு அபராதம்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை பிரதேசத்தில், அனுமதியின்றி மூன்று போத்தல் சாராயத்தினை வைத்திருந்த நபர் ஒருவருக்கு, ஆறாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து திருகோணமலை நீதிமன்ற நீதவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணாண்டோ, நேற்றுப் புதன்கிழமை (03) உத்தரவிட்டார்.

மூதூர், பெரியபாலம், ஜின்னா நகர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவருக்கே தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்தநபர், மூன்று போத்தல் சாராயத்தினை திருகோணமலை பிரதேசத்தில் வைத்திருந்த வேளையிலே பொலிஸார் செவ்வாய்க்கிழமை (02) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்நபரை, திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .