2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சாரதியைத் தாக்கியவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஜூன் 02 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை - மூதூரிடையே சேவையிலீடுபடும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதியை தாக்கிக் காயப்படுத்திய நபரை, எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் பெர்ணான்டோ, புதன்கிழமை(01) உத்தரவிட்டார்.

திருகோணமலை, ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பஸ்ஸினுள் ஏற்பட்ட சனநெருக்கம் காரணமாக, பஸ்ஸின் சாரதியுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில், சாரதி காயமடைந்துள்ளதாகவும் தற்போது அவர், திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியைத் தாக்கிய நபர், செவ்வாய்கிழமை (31) மாலை, திருகோணமலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன், அவரை, நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தியபோதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X