2025 மே 19, திங்கட்கிழமை

சிறுமியிடம் அங்க சேஷ்டை புரிந்தவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், பதினொரு வயதுடைய சிறுமியொருவரிடம் அங்க சேஷ்டை புரிந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரை, இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதவான் எல்.எச்.விஸ்வானந்த பெர்ணான்டோ, செவ்வாய்கிழமை (09) உத்தரவிட்டார்.

கோணேசபுரி, ஆறாம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபருக்கு, திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் இருக்கின்ற நிலையில், மனைவி பிள்ளைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டில் உள்ள பதினொரு வயதுடைய சிறுமியிடம்  அங்க சேஷ்டை புரிந்துள்ளார்.

இதுதொடர்பில், சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கமைய, சந்தேகநபரை திங்கட்கிழமை (08) மாலை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரை, விசாரணைகளின் பின்னர் நேற்று செவ்வாய்கிழமை(09) திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே, விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X