2025 ஜூலை 31, வியாழக்கிழமை

சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற முதியவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2016 ஜூலை 04 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எப். முபாரக்                             
பதின்மூன்று வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்வதற்கு முயன்ற, 67 வயதான முதியவருக்கு, எதிர்வரும் வியாழக்கிழமை (07) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான், எச்.ஜி. தம்மிக்க, இன்று திங்கட்கிழமை (04) உத்தரவிட்டுள்ளார். 

கடவத்தை, கொணஹின்ன பகுதியில் தனது அக்காவின் வீட்டுக்குச் சென்ற போது அயல்வீட்டுச் சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என்ற சந்தேகத்தின் பெயரில், குறித்த சந்தேகநபரை, ஞாயிற்றுக்கிழமை (03) கந்தளாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபரை, இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .