Thipaan / 2016 ஒக்டோபர் 22 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதூர் பகுதியில், வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில், 07 வயது சிறுமியை மோட்டார் சைக்கிளினால் மோதி காயப்படுத்திய 20 வயது இளைஞனை, 24ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மூதூர் பதில் நீதவான் எம்.நயீம், நேற்று (21) உத்தரவிட்டார்.
இதன்போது படுகாயங்களுக்குள்ளான சிறுமி, மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன், மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டதையடுத்தே, குறித்த இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
12 minute ago
33 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
33 minute ago
43 minute ago
52 minute ago