2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சிறிய ரக உழவு இயந்திரத்தில் மாடுகளைக் கொண்டு சென்றவர்களுக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 ஜூன் 10 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
 
கிண்ணியா வான்எலப் பிரதேசத்தில் இருந்து நாலாம் வாய்க்கால் 8ஆம் கொலனிக்கு சட்டவிரோதமான முறையில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் மாடுகள் இரண்டை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு தலா 5,100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
 
சந்தேகநபர்கள் இருவரையும், கிண்ணியா வான்எலப் பொலிஸார், நேற்று வியாழக்கிழமை (09) கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்திய போது நீதவான் தம்பிக இத்தீர்ப்பை வழங்கினார்.

மாடுகள் இரண்டையும் 50 ஆயிரம் ரூபாப் சரீரப் பிணையிலும் மாடுகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் எடுத்துச் செல்வதற்கும் நீதவான் அனுமதியளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X