2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சிறார்களை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோர் மீது நடவடிக்கை

Princiya Dixci   / 2016 மே 13 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா

திருகோணமலை, மொறவெவப் பிரதேசத்தில் சிறார்களை பாடசாலைக்கு அனுப்பாமல் வயல் வேலைகளுக்காக அழைத்துச்செல்லும் பெற்றோர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு, நேற்று வியாழக்கிழமை மாலை (12) நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் பொலிஸாரிடம் கிராமத்திலுள்ள புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

மொறவெவப் பிரதேசத்துக்கான சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம் பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.டி.என்.குலதுங்க தலைமையில் நடைபெற்ற போதே கிராமத்திலுள்ள புத்திஜீவிகள் இவ்வேண்டுகோளை விடுத்தனர்.

தெவனிபியவர-ரொட்டவெவ மற்றும் அத்தாபெந்திவௌ கிராமங்களில் கேரளா கஞ்சா, சட்ட விரோதமான சீல் சாராயம் போன்ற போதைப்பொருட்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் பாடசாலை செல்லாமல் சிறார்கள் வயல் வேளைகளுக்காக அழைத்துச்செல்லப்படுவதினால் போதைப்பொருள் பாவனையை பழகி வருவதாகவும் அதனால் சமூக சீர்கேடுகள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

சிறார்களின் எதிர்கால நலன் கருதி பாடசாலைக்கு அனுப்பாமல் வேளைக்கு அழைத்துச்செல்லும் பெற்றோர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன், இரகசிய பொலிஸாரை ஈடுபடுத்தி போதைப்பொருளை முற்றாக ஒழிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.

இக்கூட்டத்தில் கிராம உத்தியோகத்தர்கள், கிராமத்திலுள்ள புத்திஜீவிகள் மற்றும் சமய தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .