Princiya Dixci / 2015 நவம்பர் 06 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நஹீம் முஹம்மட் புஹாரி
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி பாரதிபுரம் வித்தியாலய மாணவர்களால் 'சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகத்தை இல்லாமல் செய்வோம்' எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம், இன்று வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்றது.
அத்தோடு, சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக பொது மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் மாணவர்களால் வீதி நாடகங்கள் அரங்கேற்றப்பட்டதோடு, பாடல்களும் இடம்பெற்றன.
இதில் கலந்துகொண்ட மாணவர்கள், இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள், துஷ்பிரயோகம் வேண்டாம், அன்பு எங்களுக்கு வேண்டும், சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே, அன்பான சமூகமே எங்களைப் படிக்க விடு, சிறுவர் துஷ்பிரயோகத்தை ஒழிப்போம் ஆகிய வாசங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.
39 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago