Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Thipaan / 2016 நவம்பர் 16 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட், பொன்ஆனந்தம், எப்.முபாரக், ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியாப் பாலத்துக்கு அருகில் முன்னர் மிதவைப் பாதை இறங்குதுறை இருந்த இடத்தில் புதிதாக இடம்பெற்றுவரும் அனுமதி பெறப்படாத சிலை நிர்மாணப் பணியை உடன் இடைநிறுத்துமாறு, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மரூப் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், திருகோணமலை பிரதிப் பொலிஸ்மா அதிபர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் உட்பட மற்றும் சிலருக்கு அனுப்பிய கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தாவது,
'அனுமதிப் பெறப்படாத நிர்மாணப் பணி ஒன்று இடம்பெற்று வருவது குறித்து பலரும் எனது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். இந்தப் பகுதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் எல்லைக்குட்பட்டது. கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கட்டுமானம் தொடர்பாக பின்வரும் எந்த அனுமதியும் பெறப்படவில்லை எனத்தெரிய வருகிறது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதி பெறப்படவில்லை, கரையோரம் பேணல் திணைக்களத்தின் அனுமதிபெறப்படவில்லை, பிரதேச சபையின் அனுமதி பெறப்படவில்லை, பிரதேச ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் அனுமதி பெறப்படவில்லை.
நல்லாட்சி நடைபெறும் இக்காலத்தில் இப்படி அனுமதிபெறப்படாது பகிரங்கமாக இடம்பெறும் நிர்மாணப் பணிகளை இடைநிறுத்த அதிகாரிகள் எவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காததையிட்டு, நான் மிகவும் கலையடைகின்றேன்.
எனவே, நமது நாட்டின் சட்ட திட்டங்களைப் பேணி நல்லாட்சியை உறுதிப் படுத்தும் பொருட்டு இந்த அனுமதியற்ற நிர்மாணப்பணியை உடன் இடைநிறுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' என அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
7 hours ago