Niroshini / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்,எஸ்.சசிக்குமார்
இலங்கை பொலிஸாரின் சேவா வனிமத பிரிவின் தலைவி திருமதி தீபாசாரங்க குணதீர இலங்ககோன இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது,தபால் நிலைய வீதியில் அமைந்துள்ள பழைய பொலிஸ் நிலைய வளவில் இயங்கி வரும் பாலர் கட்டத்தை திரை நீக்கம் செய்து திறந்து வைத்தார்.
மேலும்,இப்பாடசாலையில் கல்வி பயிலும் பாலர்களுக்கு தினமும் போசனை உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாலர்களின் வாத்திய குழுவுக்கான கோல உடைகளை வழங்குவதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், திருகோணமலை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மெக்காட்டி பெரேரா மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அன்ரனி மார்க் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, சீனன்குடா பொலிஸ் பிரிவில் திருகோணமலை கண்டி வீதியில் 5ஆவது மைல் கல் பகுதியில் கடமையின் போது தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டுக்கிலக்காகி உயிரிழந்த சாமர லக்மல் என்பவரின் குடும்பத்தினரின் வீட்டினை திருத்தி அதனை திறந்து வைத்தார்.

9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026