Niroshini / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை சேருநுவர பிரதேசத்தில் சாராயம் குடித்துவிட்டு தனது சகோதரனை கத்தியால் குத்தி காயப்படுத்திய நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று திங்கட்கிழமை(7) மூதூர் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.
மூதூர் கங்குவேளி புளியடிச்சோலைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அண்ணனும் தம்பியும் ஒன்றாக இணைந்து சாராயம் குடித்த பின் இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் அண்ணணை தம்பி கத்தியால் சாராமறியாக குத்தியுள்ளார்.
இதில் படுகாயங்களுக்குள்ளான நிலையில் சந்தேக நபரின் அண்ணன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து இன்று மூதூர் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026