2025 மே 03, சனிக்கிழமை

சங்கிலியை அறுத்த சிறுவன் கைது

எப். முபாரக்   / 2019 மார்ச் 18 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

திருகோணமலை - கந்தளாய் பகுதியில், வீதியால் சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவனை, கந்தளாய் பொலிஸார், நேற்று (17) கைதுசெய்துள்ளனர்.

பெண்ணொருவர் கடைக்குச் சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்து, இரண்டு பவுணுடைய தங்கச் சங்கியை அறுத்துக்கொண்டு சென்ற சந்தேகத்தின் பேரிலே, இந்தச் சிறுவனைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவனை, தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், கந்தளாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X