Niroshini / 2015 நவம்பர் 08 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை,ஜமாலியா பகுதியில் சட்ட விரோதமான முறையில் மீன் பிடிக்கச்சென்ற இரண்டு பேரை மூன்று டைனமைட்டுக்களுடன் கைது செய்துள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை ஜமாலியா பகுதியைச் சேர்ந்த அலியார் இர்சாத் (வயது 36) ஜயவிக்ரம புர -பகுதியைச் சேர்ந்த எஸ்.எம்.ஆனந்த (வயது 41) ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது,கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து வள்ளமும் படகு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நாளை திங்கட்கிழமை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
52 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
1 hours ago