Niroshini / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கைத் துறைமுகத்துவார கடற்பரப்பில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து படகு,மண்ணெண்ணெய் களன் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபர் இன்று வியாழக்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிபதி குறித்த நபருக்கு 10,000 ரூபாய் தண்டப்பணம் விதித்ததோடு அவரை 10 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்தார்.
அத்தோடு குறித்த நபரின் படகு உள்ளிட்ட உபகரணங்களை உரியவரிடம் ஒப்படைக்குமாறும் நீதிபதி பொலிஸாருக்கும் கடற்படையினருக்கும் உத்தரவு பிறப்பித்தார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago