Princiya Dixci / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மூன்று மாடுகளைக் கந்தளாயிலிருந்து கிண்ணியாவுக்கு லொறியொன்றில் கொண்டு சென்ற இருவரை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
அனுமதிப்பத்திரமின்றி மிருகங்களை துன்புறுத்தும் வகையில் லொறியொன்றில் இன்று சனிக்கிழமை (12) காலை கொண்டு சென்ற போது கந்தளாய் பொலிஸார் கைது செய்து சந்தேகநபர்கள் இருவரையும் கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
சந்தேக நபர்கள் கொண்டு சென்ற மூன்று மாறுகள் பொலிஸாரல் மீட்கப்பட்டதுடன், மாடுகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய லொறியும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago