2025 ஜூலை 26, சனிக்கிழமை

சட்டவி​ரோதமான முறையில் மணல் ஏற்றிய இளைஞன் கைது

Niroshini   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை - இறக்கண்டி பகுதியில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச்சென்ற  டிப்பர் வாகனத்துடன் இளைஞன் ஒருவரை நேற்று அதிகாலை  (30) கைது செய்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

அதே இடத்தைச் சேர்ந்த நூர் முகம்மது இம்ரான் கான் (வயது 24) என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது டிப்பர் வாகனத்தில் இரவு நேரங்களில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த இளைஞனை கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X