2025 நவம்பர் 16, ஞாயிற்றுக்கிழமை

சடலமாக மீட்கப்பட்ட நபர்; பொலிஸார் தீவிர விசாரணை

Freelancer   / 2022 பெப்ரவரி 07 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை - குச்சவெளி, திரியாய் பிரதேசத்தில் நேற்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பிரதேச பொதுமக்களினால் சடலம் தொடர்பில் குச்சவெளி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுத்துறை - உக்வத்தை, விஜித மாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த சனத் எடுக்சூரிய (வயது 39) என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது கொலையா அல்லது இயற்கை மரணமா என குச்சவெளி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X