2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சட்ட விரோத மணல் அகழ்வு; 13 படகுகளுடன் மூவர் சிக்கினர்

Princiya Dixci   / 2021 ஜூலை 10 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஆலங்கேணி, ஈச்சந்தீவுப் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களால் கைவிட்டுச் செல்லப்பட்ட 13 படகுகள், பொலிஸாரால் நேற்று (09) கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்தோடு, மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சட்டவிரோதமாக மணல் அகழ்வு முன்னெடுக்கப்பட்ட இடத்தைப்   பொலிஸார் முற்றுகையிட்ட போது, அங்கிருந்த பலர் பதறியடித்து சிதறியோடித் தலைமறைவாகியுள்ளனர்.

இதன்போது, மூவரைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்த கிண்ணியா பொலிஸார், ஏனையவர்களையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .