Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 பெப்ரவரி 06 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை-மூதூர் இந்து இளைஞர் மன்றத்தின் காணியினுள் பொலிஸாரின் உத்தரவையும் மீறி சட்டத்திற்கு முரணான வகையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்றத்தின் போசகர் பொ.சச்சிவானந்தம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மூதூர் ஜாயா நகர் கிராம சேவகர் பிரிவில், மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள குறித்த காணியானது நீண்டகாலமாக இந்து இளைஞர் மன்றத்தினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. மன்றத்திற்கு சொந்தமான குறித்த காணியை சிலர் பொய்யான ஆவணங்களை தயாரித்து அபகரிக்க முயல்கின்றார்கள் இது தொடர்பாக மூதூர் பொலிஸ் நிலையத்திலும், திருகோணமலை விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த காணி அபகரிப்பு தொடர்பாக திருகோணமலை பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 10ஆம் திகதி குறித்த தரப்பினர் உட்பட, முறைப்பாட்டாளர்களையும் மூதூர் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் அழைத்து விசாரணை இடம்பெற்றது. அதன்போது ஆவணங்களை பார்வையிட்ட பொலிஸ்மா அதிபர் சம்பந்தப்பட்ட நபர்களை காணிக்குள் நுழையக்கூடாது என எச்சரித்ததோடு விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுமாறும் மன்றத்தினரை பணித்திருந்திருந்தார். அதற்கமைய கடந்த மாதம் 26 ஆம் திகதி விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த காணியினுள் பொலிஸாரின் உத்தரவையும் மீறி சட்டத்திற்கு முரணான வகையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த செயற்பாடானது இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எனவும் குறித்த நபர்கள் இது போன்ற பல குற்றங்கள் செய்தது தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என விசாரணையின்போது பொலிஸார் சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட செயலாளர் மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கும் எழுத்து மூலமாக மன்றம் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்துல்சலாம் யாசீம்
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago