Editorial / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள், இன்று (10) மீட்கப்பட்டுள்ளனவென, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கிண்ணியா, அஹமட்லேன் வீதியிலுள்ள 58 வயது குடும்பஸ்தர் ஒருவரிடமிருந்தே, இவ்வாறு சட்டவிரோத சிகரெட்டுகள் 400 மீட்கப்பட்டுள்ளனவென, பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்துக் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், உரிய சிகரெட்டுகளுடன் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago