Editorial / 2017 நவம்பர் 17 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஏ.பரீத்.
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்துக்கு கீழ் பகுதியில், மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி, சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரை நேற்று (16 ) வியாழக்கிழமை மாலை, திருகோணமலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிண்ணியா, நடுத்தீவு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த, 29 வயது இளம் குடும்பஸ்தரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவரிடமிருந்த உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட நபரையும் மணல் ஏற்றிய உழவு இயந்திரத்தையும், மேலதிக விசாரணைக்காக கிண்ணியா பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோஜன் தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட நபரை இன்று (17), திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago