தீஷான் அஹமட் / 2017 நவம்பர் 22 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, மூதூர், வெள்ளை நாவல் காட்டுப் பகுதியில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி, சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திர சாரதிகள் அறுவர், விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டு, மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த காட்டுப்பகுதியில் நேற்றிரவு (21) விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஆறு உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித் அறுவரும், மூதூர் பொலிஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனரெ் என்பதுடன், மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
49 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago