2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் கலந்துரையாடல்

Janu   / 2023 ஜூன் 04 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம மற்றும்  திருகோணமலை மாவட்ட  பிரதேச செயலகங்களை சேர்ந்த பிரதேச செயலாளர்களுடன் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் கலந்துரையாடலொன்று (03) திருகோணமலையில் இடம் பெற்றது.

இதில் அதிகமாக திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களில் சட்டவிரோத சுரங்கம் மற்றும் மணல் அகழ்வு நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது . தற்போது காணப்படும் பொறிமுறை குறித்து  விளக்கம் அளிக்குமாறும், சட்டவிரோத சுரங்கம் மற்றும் மணல் அகழ்வு தொடர்ந்து நிலவி வருவதால் அது குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறும் ஆளுனர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X