2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வு; நால்வர் கைது

Princiya Dixci   / 2021 செப்டெம்பர் 23 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை,  அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வரை, இன்று (23) கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.

அக்போபுர சீனி அலை நான்காவது வலயத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட போது, விசேட பொலிஸ் அதிரடைப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சூரியபுர விசேட பொலிஸ் அதிரடைப் படையினாரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இக்கைது இடம்பெற்றுள்ளது.

கந்தளாய் மற்றும் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 23, 27, 30 மற்றும் 33 வயதுடைய நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் இவர்களின் 4 உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X