2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சட்டவிரோத மீன்பிடியை எதிர்த்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம். கீத் , அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மாவட்டத்தில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி முறையை எதிர்த்து, திருகோணமலை நகரின் மத்தியில் மீனவர்கள் இன்று (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

டைனமைட் பாவனை, தடைசெய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்பிடித்தல் மற்றும் தடைசெய்யப்பட்ட பிரதேசங்களில் மீன்பிடித்தல் ஆகிய தொடர்ந்தும் இடம்பெறுவதைக் கண்டித்தும் இதன்நிமித்தம் உரிய அதிகாரிகள் தமது கடமைகளை துஷ்பிரயோகம் செய்கின்றமை குறித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அத்துடன், இச்சட்டவிரோத மீன்பிடி முறைகளுக்கு எதிராக இலங்கைக் கடலோரக் காவல் படை மற்றும் இலங்கை கடற்படை ஆகியன எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காத நிலைமை தொடர்ந்தும் காணப்படுவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கோஷம் எழுப்பினர்.

சுமார் 200க்கும் அதிகமான மீனவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X