2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக ஆஸி. செல்லாதீர்

Freelancer   / 2022 நவம்பர் 29 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்,ஹஸ்பர்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழிப் பயணம் மூலமாக செல்வதை
தடை செய்யவும் மக்கள் அதனை நம்பாது செயற்படுவது தொடர்பிலான விழிப்புணர்வை
ஏற்படுத்தும் வகையிலான கலந்துரையாடலொன்று திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று (29) இடம்பெற்றது.

அவுஸ்திரேலிய நாட்டுக்கான உயர்ஸ்தானிகர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்க்கு
இடையில் இடம் பெற்ற குறித்த சந்திப்பில் அவுஸ்திரேலியாவுக்கு கப்பல் மூலம் செல்வதனால்
எந்த பலனும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இலட்சக்கணக்கான பணத்தை கொடுத்து ஏமாறாமல் சட்ட விரோதமான முறையில் செல்வதை
நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இதனை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்வது
தொடர்பாகவும் உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் இதன் போது பொலிஸ் உயர்
அதிகாரிகளிடத்தில் தெரிவித்துக் கொண்டார்.

குறித்த சந்திப்பில் அவுஸ்திரேலிய நாட்டின் பொலிஸ் உயர் அதிகாரி, ஊடக அதிகாரி உட்பட
திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் என பலர் கலந்து கொண்டனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X