Niroshini / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கான மாதாந்தம் இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான சத்துணவு வழங்கள் திட்டம் கடந்த ஓகஸ்ட் மாதத்திலிருந்து அந்த சத்துணவுக்காக வழங்கப்பட்ட முத்திரைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கந்தளாய் பிரதேச செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை கர்ப்பிணிப் பெண் ஒருவர் சத்துணவுக்காக வழங்கப்படுகின்ற விண்ணப்பப் படிவங்களை பூரணப்படுத்தி கிராம அதிகாரி தொடக்கம் மருத்துவ அதிகாரி வரை பலரிடம் கையொப்பம் பெற்று பிரதேச செயலக அதிகாரியிடம் கையளித்தால் கடந்த மாதத்திலிருந்த இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவ்வதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், கந்தளாய் பிரதேச கர்ப்பிணிப் பெண்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக பத்து மாதத்துக்கும் இருபதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், கந்தளாயில் மாத்திரம் இக்கொடுப்பனவு வழங்கப்படுவது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே,இந்த கொடுப்பனவை கிரமமாக வழங்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி கர்ப்பிணிப் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
23 Mar 2026