2026 மார்ச் 25, புதன்கிழமை

சமூக ஆதரவு குழுக்களுக்கான மீளாய்வு கலந்துரையாடல்கள்

Kogilavani   / 2016 ஜனவரி 21 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

திருகோணமலை, மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிராமங்களில் இடம்பெற்றுவரும் போசாக்கு தொடர்பான வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள 30 கிராமங்களில் உள்ள சமூக அதரவு குழுக்களுக்கான மிளாய்வு செயற்பாடானது தற்போது இடம்பெற்று வருகின்றது.

அதனடிப்படையில் நேற்று புதன்கிழமை (20), மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம், சந்தனவெட்டை, இத்திக்குளம், சின்னக்குளம் ஆகிய கிராமங்களுக்கான மீளாய்வு கலந்துரையாடல் அமர்வுகள் அவ் அவ் கிராமங்களிலேயே இடம்பெற்றது.  இக் கலந்துரையாடலில் 15 பேர் வீதம் பங்குபற்றினர்.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான நிதியத்தின் அனுசரணையுடன் இடம்பெறும் இத்திட்டத்தை விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் செயற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .