2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்தை நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 மே 13 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்,பதுர்தீன் சியானா

திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்;பட்ட சம்பூர் பகுதியில் அனல் மின்சார நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெறுகின்ற நிலையில், இந்த அனல் மின்சார நிலையத் திட்டத்தை நிறுத்துமாறு தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இன்று வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகையை அடுத்து, தோப்பூர் பாத்திமா மகளிர் கல்லூரிக்கு முன்பாகவுள்ள புலியடிச் சந்தியில் மூதூர் பசுமைக் குழுவின் ஏற்பாட்டில் இந்த  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்;பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், 'சம்பூர், தோப்பூர், மூதூர் பிரதேசங்கள் விவசாயத்தையும்; மீன்பிடியையும்  அடிப்படையாகக் கொண்டாவை ஆகும். எனவே, சம்பூர் பகுதியில் அனல் மின்சார நிலையம் அமைக்கப்படுமாக இருந்தால், இந்த அனல் மின் நிலையத்திலிருந்து வெளியாகும் இரசாயனக் கழிவும் புகையும்; எமது ஜீவனோபாயத் தொழில்களை பாதிப்படையச் செய்யும். அத்துடன், நோய்கள் ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றன' என்றனர்.

மேலும் திருகோணமலை மாவட்ட அரசியல்வாதிகள்,  சம்பூர் பகுதியில் அமைக்கப்படவுள்ள அனல் மின்சார நிலையத்தை தடுப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்து எமது எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாஹிர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், 'சம்பூர் பகுதியில் அனல் மின்சார மின்சார நிலையத்தை  இடைநிறுத்துவதற்கு ஜனாதிபதி,  பிரதமர் ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .