2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

சம்பூர் -கொழும்பு பஸ் சேவை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எஸ்.சசிக்குமார்

இலங்கை போக்குவரத்துச் சபையின் மூதூர்ச் சாலையினால் சம்பூரிலிருந்து கொழும்புக்கு முதன்முறையாக பஸ் சேவை ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தினமும் சம்பூரிலிருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்படும்  பஸ் மூதூர், கிளிவெட்டி, அலிஒலுவ, கந்தளாய், ஹபறணை ஊடாக அதிகாலை 5.30 மணிக்கு கொழும்பைச் சென்றடையும். அதேபோன்று, தினமும் காலை 07 மணிக்கு கொழும்பிலிருந்து சம்பூருக்கான பஸ் சேவை இடம்பெறுமென சாலை முகாமையாளர் ஏ.எல்.நௌபீர் தெரிவித்தார்.

இந்த பஸ் சேவையின் ஒருவழி பயணக் கட்டணமாக 348 ரூபாய் அறவிடப்படுமெனவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .