Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சம்பூர்ப் பகுதியில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு தற்காலிக வீடுகளை அமைத்துக்; கொடுப்பது தொடர்பான கூட்டம், நாக சம்பூரான் கோவில் வளாகத்தில்; நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
யூ.என்.எச்.சி.ஆர் நிதியுதவியுடன்; கிராம அபிவிருத்தி நிறுவனம் தற்காலிக வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தலா ஒரு வீடு சுமார் ஒரு இலட்சத்து 45 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியில் அமைக்கப்படவுள்ளது. மொத்தமாக 210 தற்காலிக வீடுகளையும் 70 நிரந்தர மலசலகூடங்களையும் முதற்கட்டமாக அமைக்கவுள்ளதாக மூதூர் பிரதேச செயலாளர் வீ.யூசுப் தெரிவித்தார்.

9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026