2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சமூகச் சீர்திருத்தச் சேவையில் 89 பேர்

அப்துல்சலாம் யாசீம்   / 2017 நவம்பர் 14 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனவரி மாதம் முதல் இன்று வரை , குற்றப்பணத்துக்குப் பதிலாக சமூகச் சீர்திருத்தப் பணியில் ஈடுபடுவதற்காக 89 பேருக்கு, திருகோணமலை நீதிமன்றத்தால் கட்டளை பிறப்பிக்கப்பட்டதென, சமூகச் சீர்திருத்த உத்தியோகத்தர் எம்.எச்.முபாரக் தெரிவித்தார்.

நீதிமன்றத்தால் வழங்கப்படுகின்ற இரண்டு வருடங்களுக்கு மேற்படாத  சிறைத்தண்டனைக்குப் பதிலாக  வழங்கப்பட்டு வருகின்ற  இந்தச் சமூகச் சீர்திருத்தக் கட்ளை கஞ்சா, கசிப்பு, கோடா, சூது, ஹெரோய்ன், மதுபோதையில் அநாகரிகமான முறையில் நடந்துகொள்ளல் போன்ற குற்றச்செயல்களுக்காகவே, வழங்கப்பட்டு வருவதாகவும்  அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த 89 பேரில் 27 பேர், தமது கட்டளைகளை நிறைவு செய்துள்ளனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X