2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சம்பூருக்காக சிங்கப்பூரில் ஒப்பந்தம் கைச்சாத்து

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தியில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூர் அபிவிருத்திக்காக, சிங்கப்பூர் நாட்டின் முதலீடுகளைக் கொண்டு பாரிய திட்டங்களை மேற்கொள்ள ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தம், கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவுக்கும் சிங்கப்பூர் பைன் கெபிடல் குழுமத்தினருக்கும் இடையில், சிங்கப்பூரில் வைத்து இன்று (19) கைச்சாத்திடப்பட்டது.

சிங்கப்பூரில் பல  முதலீட்டாளர்களைக் கொண்ட மேற்படி குழும நிறுவனத்தின் ஊடாக, இலங்கையில் மேற்கொள்ளப்படும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களில், கிழக்கின் மிகப் பிரதான முக்கிய திட்டம், சம்பூரில் மேற்கொள்ளப்படுவது இதுவே முதற்தடவையென, ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தக் கைச்சாத்திடலில் கிழக்கு மாகாண ஆளுநரின் தலைமையில், மாகாண பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபயகுணவர்தன,  மாகாண உள்ளூராட்சி முதலமைச்சர் அலுவலகச் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்தன, இணைப்புச் செயலாளர் நிமல் சோமரட்ன, கிழக்கு மாகாண சுற்றுலா அபிவிருத்திப் பணியகத்தின் பணிப்பாளர் ஹஸன் அலால்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X