அப்துல்சலாம் யாசீம் / 2018 டிசெம்பர் 23 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசிய சமாதானப் பேரவையும் கந்தளாய் சக்தி அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த திருகோணமலை மாவட்டச் சர்வமதக் குழுவின் கலந்துரையாடல், டின்கோ விடுதி மண்டபத்தில், இன்று (23)நடைபெற்றது.
தேசிய சமாதானப் பேரவையின் அனைத்து இனங்கள், மதங்களுக்கிடையிலான இன நல்லுறவை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் மதங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் மிக முக்கிய பிரச்சினைகள் பற்றி இங்கு ஆராயப்பட்டதுடன், அப்பிரச்சினைகளை, சர்வமதக் குழுவின் ஊடாக எவ்வாறு தீர்த்து வைக்கலாம் எனவும் ஆராயப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில், 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் குழுக்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு எதிர்காலத்தில் பிரச்சினைகள் வராமல் பாதுகாப்பதற்கு, எவ்வாறான விழிப்புணர்வுச் செயற்றிட்டங்களை முன்னெடுப்பது பற்றியும் விரிவாக ஆராயப்பட்டன.
9 minute ago
15 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
31 minute ago
1 hours ago