Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2018 மார்ச் 02 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை நகர் பகுதியிலுள்ள ஆடை வியாபார நிலையமொன்றில் புத்தரின் சின்னம் பொறிக்கப்பட்ட 10 சாரிகளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கடை உரிமையாளரை இன்று (02) காலை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், திருகோணமலை,
ராஐவரோதய வீதி,டபிள்யூ.சுந்தகலிங்கம் (61வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தரின் படம் பொறிக்கப்பட்ட சாரிகளை வைத்திருப்பதாக பொலிஸ் அதிரடிப்படையினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து கடையை சோதனையிட்ட போது 10சாரிகள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஐர்படுத்தவுள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago