2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

சிரேஷ்ட ஊடகவியலாளருக்கு ‘வித்தகர்’ விருது

Editorial   / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம். கீத்

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2019 ஆண்டுக்கான கிழக்கு மாகாணத் தமிழ் இலக்கிய விழாவில் கௌரவிக்கப்படும் பல்துறைக் கலைஞர்கள், இலக்கியவாதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் கிண்ணியாவைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஏ.எம். அப்துல் பரீத்துக்கு ஊடகத்துறைக்கான "வித்தகர் "விருது கிடைக்கப் பெற்றுள்ளது.

இவர் ஊடகத்துறையில் சுமார் 38 வருட கால அனுபவத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாகாணத் தமிழ் இலக்கிய விழாவில் வித்தகர் விருது, சிறந்த நூலுக்கான பரிசு, இளம் கலைஞர் விருது, அரச படைப்பாக்கம் என்பவற்றில் தெரிவானவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனரென, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி வளர்மதி ரவீந்திரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .